Please dont buy this book by Gobinath
ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
"ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க" என்று அருமையான தலைப்பை கொண்ட இந்த புத்தகத்தை, படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
"ஏதாவது செய், செஞ்சுகிட்டே இரு"
இதுதான் நான் இந்த புத்தகத்தில் இருந்து கற்றது. இந்த புத்தகத்தை படித்தவுடன் ஒரு புத்துணர்வு ஏற்பட்டதை உணர்ந்தேன்! இதில் கோபிநாத் தன் வாழ்வில் பார்த்ததையும், படித்ததையும் அவர் நடையில் விளக்கி இருக்கிறார். இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் அவர் தந்திருக்கும், தனது தொடக்க எழுத்துக்களே இதற்கான தெளிவான, சிறப்பான அறிமுகம். நல்ல புத்தகம்! இதனை கொடுத்த "நீயா நானா" கோபிநாத்திற்கும், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்க்கும் என் நன்றி.
syndicate this site