Samooga Paarvai
மசோதா வருகுது! மனிதனை திருத்த!
மாசுகள் இனி மண்ணில் குறைக்க,
மனிதன் ரெயிலென புகைத்ததை நிறுத்தி,
மாசுகள் குறைத்திட மசோதா வருகுது!
பொதுஇடங்களில் புகைக்க கூடாதாம் - நற்
சிந்தனை உடையோர் சீறி எழுந்தனர்,
மண்ணின் மைந்தா புவியில் நிலைப்பாயா?
மதங்கள் இல்லாத மானுடம் செய்வாயா?
கண்ணின் உறக்கம் கழற்றி எரிவாயா?
வித விதமான வேற்றுமை கலைவாயா?
விழுப்புண் ஏந்திய வீரன் ஆவாயா?
விந்தைகள் செய்து வியக்க வைப்பாயா?
வீணர் கூடி விளக்கம் அளித்து
விதவை எனுமோர் பட்டம் புனைந்து
வண்ணப் புடவை வேண்டாம் என்று
வெள்ளைப் புடவை போதும் என்றனர்!
பாரதி கண்ட புதுமை பெண்கள்
பாரதம் முழுதும் பரவிக் கிடக்க
பாகம் பிரிக்கும் பால்நிற ஆடை
ஏனோ தொலைந்தாய் மனிதா? ஏனோ மனிதா இப்படி ஆனாய்? தெரிந்தே சென்று குழியில் விழுந்தாய் உந்தன் உருவம் நீயே மறந்தாய் ஊரார் உருவம் உன்னில் பதித்தாய் ஏனோ மனிதா இப்படி ஆனாய்? இதயம் என்னும் இலக்கம் இழந்தாய் பார்வைக்கு ஏங்கும் பழியினை பெற்றாய்

syndicate this site