Bill Gates - Software Sultan

01 Jan 2010
Posted by stylesen

பில் கேட்ஸ் - சாஃப்ட்வேர் சுல்தான்

bill gates bookதிப்பு சுல்தான் புத்தகத்தை படித்து முடித்த கையோடு நான் எடுத்த அடுத்த புத்தகம் சாஃப்ட்வேர் சுல்தான் பில் கேட்ஸைப் பற்றி. என். சொக்கன் எழுதிய நிறைய புத்தகங்களை படித்திருக்கிறேன், இந்த புத்தகமும் மிக எளிமையாக, விஷயம் பொதிந்ததாக, யாவருக்கும் புரியும் வண்ணம் அமைந்துள்ளது.

"நாம வாழனும்னா, எத்தனை பேரை வேணும்ணாலும் அழிக்கலாம்"

இந்த வாசகம் தான் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது, இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன். நான் கட்டற்ற மென்பொருள் மற்றும் ரிச்சர்ட் ஸ்டால்மேனின் தீவிர விசிரி, என் வலைதளம் முழுவதும் இதன் அடையாளங்களை காணலாம். பின்பு ஏன் பில் கேட்ஸைப் பற்றி படிக்க வேண்டும்? "See both sides of the coin"  என்ற பிரபல வாக்கியம் தான் இதற்கு காரணம். இந்த புத்தகம் அதற்கான சிறந்த கருவி, ஏனெனில், இந்த புத்தகம் பில் கேட்ஸை ஒரு தராசில் நிறுத்தி, தேவையான அளவு தெளிவாக இரண்டு பக்கங்களையும் (நல்லது, தீயது) விளக்குகிறது, இதற்கான சான்றை முதல் அத்யாயத்திலேயே காணலாம்.

சிறு வயது பில் கேட்ஸ் முதல், இன்றைய (2007) பில் கேட்ஸ் வரை அனைத்து சுவாரஸ்யமான விஷயங்களையும் நம் கண்முன் படம்பிடித்து காட்டுகிறது இந்த புத்தகம். இந்த புத்தகத்தின் மிக எளிய நடையினை பாராட்டியே தீர வேண்டும். "கம்ப்யூட்டர் வச்சுகிட்டு லட்ச லட்சமா சம்பாதிக்கிறேங்களேப்பா, இதுல எப்படி காசு வருது? எனக்கு ஒன்னுமே புரியல" , என்று அப்பாவியாக கேட்கும் நமது வயதான நண்பர்களுக்கு, இப்படித்தான் ஒருவன் சம்பாதித்து. உலகின் மிகப்பெரிய பணக்காரனாகியிருக்கிறான் என்று காட்ட மிகச் சிறந்த புத்தகம் இது!

பிஸ்னஸ்னு வந்துட்டா "எவனா இருந்தாலும் வெட்டுவேன்" என்று கங்கனம் கட்டிக் கொண்டு திரிந்தவர் பில் கேட்ஸ். "நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால்" என்ற எண்ணமும் இவருக்கு அதிகம் இருந்திருக்கிறது, எனினும் திறமையாக அந்த முயலின் மூன்று காலை காட்டி, அடுத்தவரிடம் பணம் சம்பாதிக்கும் சாமர்த்தியமும் அவருக்கு உரித்தானது. சின்ன வயதில் இருந்தே பிஸினஸ் பழகிய பில் கேட்ஸ், ஒரு சிறந்த பிஸ்னஸ் மேன் என்றால் அது மிகையாகாது, ஏனெனில் அவர் தன் உயிர் நண்பன் பால் ஆலனையே பணக்காரர் பட்டியலில் பின் தள்ளிய சூட்சுமம் அறிந்தவர்.

எளிய நடையில், நிறைய உவமைகளை, ஒவ்வாமை இல்லாமல் வைத்து, புரியும்படி சொல்வதில் என். சொக்கன் வல்லவர். இந்த புத்தகத்திலும் அது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. திருவிளையாடலில் வரும் தருமி புலவரையும், பில் கேட்ஸின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் விளக்கி இருப்பது அற்புதம். உலகின் மிகப் பெரிய பணக்காரரைப் பற்றி கூறும் பொழுது நிறைய புள்ளி விவரங்களை தவிர்க்க இயலாது, எனினும் அதனை நேர்த்தியாக சிறிதும் அலுப்பு தட்டாமல், கட்கசிதமான கலவையாக தந்திருப்பது இன்னும் அருமை.

பில் கேட்ஸ் வாழ்வினை ஆவலுடன் படிக்கும் போது என்னதான் சுவாரஸ்யமாக இருந்தாலும், தமிழ் சினமா பார்த்து வளர்ந்தவன் நான்! எனவே மசாலா விஷயங்கள் தேவைப் படுகின்றது. நாம் மசாலாவை ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த நேரத்தில், சற்றும் நம்மை ஏமாற்றாமல், பில் கேட்ஸின் காதல் கதையையும், அவர் வீட்டின் அருமை பெருமைகளையும் விளக்கும் சொக்கன் கைதட்டல் பெருகிறார் :)

என்னப் போன்ற பில் கேட்ஸ் ரசிகர் அல்லாத பலருக்கும், மெலின்டா கேட்ஸ் பவுன்டேசன் வாயிலாக தன் சொத்தில் பாதியை மக்கள் சேவைக்காக கொடுத்துல்ல பில் கேட்ஸை, "இவன் தான்யா பில்கேட்ஸ்" என்று அறிமுகம் செய்து, மனதின் ஏதோ ஒரு மூலையில் பில் கேட்ஸைப் பற்றி ஒரு மரியாதையை ஏற்படுத்திய இந்த புத்தகத்தை கொடுத்த என். சொக்கன் அவர்களுக்கும், கிழக்கு பதிப்பகத்தாருக்கும் என் நன்றி.

அடுத்து என்ன? சொக்க(ன்) வைத்த ஏ. ஆர். ரஹ்மான் :)

அருமை!!! அருமை !!!!

அழகாக உள்ளது இந்த வலை !!!!நிறைய கருத்துக்கள் !!!வாழ்த்துக்கள்


Great review!!!

This post added me more interest to read New Horizon Media books.


A Nice Book review!

Really i felt like im reading a book review from some professional writer....but its yours....Keep it up...May God bless you!May all your wishes cometrue and help others...


நன்றி!

என்னுடைய புத்தகம்பற்றிய விமர்சனம் + அறிமுகத்துக்கு நன்றி நண்பரே :)
பில் கேட்ஸ்போலவே, ஓபன் சோர்ஸ் இயக்கம்பற்றியும் விரிவாக எழுத ஆசை, வாய்ப்பு ஏற்படுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.
- என். சொக்கன்,
பெங்களூரு.