Coke, Pepsi books

30 Jan 2010
Posted by stylesen

கோக-கோலா, பெப்ஸி

சென்னை புத்தக கண்காட்சிக்கு இரண்டாவது முறை சென்ற போது நான் வாங்கிய புத்தகங்களில் ஒன்று என். சொக்கன் அவர்கள் எழுதிய "பெப்ஸி". இதனை வாங்கிய மறுதினமே படித்து முடிக்க நினைத்தேன், அப்போது வானொலி நிகழ்ச்சி ஒன்றில் என். சொக்கன் அவர்கள் பெப்ஸி புத்தகத்தை அறிமுக படுத்தி பேசினார் (நல்ல வசீகரமான குரல் மற்றும் கருத்துக்கள்), இதனை கேட்டு மகிழ்ந்த பின்னர், நான் இப்போது பெப்ஸி புத்தகத்தை படிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். ஆம், பெப்ஸியின் முன்னோடி "கோக் - ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு" என்ற புத்தகத்தையும் என். சொக்கன் எழுதியுள்ளார், இவ்விரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக படித்தால், "கோலா வார்ஸ்" வரலாறு முழுமை அடையும் என்பதால், உடனே சென்று லேண்ட்மார்க்கில் கோக் புத்தகத்தின் ஒரு பிரதியினை வாங்கி வந்தேன் (கிழக்கு பதிப்பக புத்தகங்கள் எங்கும் கிடைக்கும், எனினும் இருவர் டிவிடி வாங்க சென்ற போது, இதனை அள்ளி வந்தேன்).

Coke book cover   Pepsi book cover

"மனம்போல் தினம் ஜமாய், கோக-கோலா என்ஜாய்"
"எஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி"

புத்தகத்தை படித்து முடித்தவுடன் என் மனதில் இவ்விரண்டு வாசகங்களும் தோன்றின, பல ஆண்டுகள் தாண்டியும் மனதில் நீங்கா இடம் பிடித்த விளம்பரங்கள் அவை ("வாஷிங் பவுடர் நிர்மா" ரக விளம்பரங்கள் இவை). ஆம் நம்மை அறியாமலே நம்மில் பலர் பல நேரம் இவ்விரு வாசகங்களை முனுமுனுத்திருக்கிறோம். கோலா பிஸினஸ் மட்டும் அல்ல இவ்விரு கம்பெனிகளின் வரலாறு பல வியாபார சூட்சுமங்களை நம்மிடம் அறிமுகப்படுத்துகிறது. வெறும் சர்க்கரை தண்ணீர் கரைசல் தான் எனினும், இன்று பற்பல ஆயிரம் கோடிகள் புரல்கிற வியாபாரம் இது. நம் வாழ்வில் "ஆண், பெண்" என்ற எதிர்மறை சமாச்சாரம் தொடங்கி "எம். ஜி. ஆர், சிவாஜி", "ரஜினி, கமல்" என்று பலவற்றை பார்த்துள்ளோம், அதைபோல் பலர் மனதில் இடம் பிடித்துள்ள ஒன்று "கோக-கோலா, பெப்ஸி". ஒரு கடையில் நுழைகிறோம், "ஏம்பா பெப்ஸி இருக்கா?", "இல்ல சார் இங்க கோக் தான் கிடைக்கும்", "சரி ஒன்னு குடு" என்று வாங்கி குடிக்கும் சம்பவம் இந்த நிமிடம் கூட எங்கோ உலகின் ஒரு மூலையில் நடந்து முடிந்திருக்கும், அவ்வளவு பிரபலமான பிராண்டுகள் இவ்விரண்டும். உலகில் எல்லோரும் ஆண்களாக இருந்தால் பல விஷயங்கள் நடக்காது, அப்படியே நடந்தாலும் சுவாரஸ்யமாக இருக்காது. அதைபோல தான் இந்த கோலா சாம்ராஜ்யமும், கோக-கோலா மட்டும் இருந்தால் அந்த நிறுவனத்திற்கே போர் அடித்துவிடும். பெப்ஸி என்ற பலமான (பிற்காலத்தில்) எதிராளி தோன்றியதால் தான், நமக்கு இன்று "சாய்ஸ்" இருக்கிறது, மேலும் பல சுவாரஸ்யமான பல கதைகள் நிலவுகிறது.

உலகில் நாம் எந்த மூலையில் சென்று "கோக-கோலா" என்றாலும் சரி, "பெப்ஸி" என்றாலும் சரி எல்லோரும் புரிந்துகொள்வார்கள். இது நாடு, மொழி மற்ற எல்லாவற்றையும் கடந்த ஒரு பாரம்பரியம், இதனை உருவாக்க கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் பிடித்துள்ளது. இந்த வரலாற்றை நம்மிடம் மிக எளிமையாக விவரிக்கிறது இந்த புத்தகம். இவ்வளவு பெரிய வரலாற்றில் புள்ளி விவரங்கள் நிறைய இருக்கும், எனினும் தேவையானவற்றை ஆங்காங்கே மிகக் கட்சிதமாகச் சேர்த்து அளித்துள்ளார் என். சொக்கன்.

சில கண்டுபிடிப்பாளர்கள் நல்ல திறமைசாலிகளாக இருப்பினும் பிஸினஸில் கோட்டை விடுவார்கள், அதுதான் கோக-கோலா மற்றும் பெப்ஸியின் கதையும் கூட. இதனை கண்டுபிடித்தவர்களின் குடும்பம் ஏழ்மையில் வாடியது என்ற செய்தி பரிதாபமானது. இவ்வகை கோலாக்கள் எத்தனையோ சர்சைகளில் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் சிக்கினாலும் கூட, எல்லா இடங்களிலும் விற்பனை என்னமோ அமோகமாகத்தான் இருக்கிறது.

இந்த விமர்சனத்தை படித்தவுடன் இந்த புத்தகத்தை படிக்கும் ஆசை எழுந்தால், புத்தகம் வாங்கிய கையோடு, ஒரு கோக-கோலா மற்றும் பெப்ஸி பாட்டிலை வாங்கி வர மறவாதீர், ஏனெனில் சொக்கன் எழுத்துக்கள் சில நேரங்களில் கோலா தாகத்தை ஏற்படுத்துகிறது :) புத்தகத்தை படிக்க ஆரப்பித்தவுடன் ஒரு கோக் அல்லது பெப்ஸி குடித்தால் நல்லா இருக்கும், ஆனா போய் வாங்கனுமே என்று புலம்பி தவித்து புண்ணியம் இல்லை, படிப்பீர்களே தவிர வாங்க செல்ல முடியாதபடி புத்தகம் உங்களை கட்டிப்போட்டு விடும், அந்த அளவிற்கு சிறந்த செய்திகள் கொண்டது இந்த புத்தகம் (பின்பு என்னை குற்றம் சொல்லாதீர்கள், க. க. க. போ).

இவ்விரு நிறுவனங்களின் வரலாறு ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்தது, எனவே தான் சில அத்யாயங்கள் அப்படியே இரு புத்தகங்களிலும் (பிழைகள் உட்பட) தென்படுகிறது. எதிர்கால வாசகர்களுக்கு இவ்விரண்டு புத்தகத்தில் இருக்கும் செய்திகளை ஒன்றிணைத்து கிழக்கு பதிப்பகத்தார் வெளியிட்டால் மிகவும் நன்மை. சிறுசோ, பெருசோ பிஸினஸ் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயன்படக்கூடிய புத்தகம் இவை. இருபெரும் நிறுவனங்களின் வரலாற்றை எளிதில் விளங்கும்படி எழுதிய என். சொக்கன் அவர்களுக்கும், இதனை அழகாக தொகுத்து வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்தாருக்கும் என் நன்றி!

இவ்விரு புத்தகத்தில் காணப்பட்ட சில அச்சு பிழைகள் கீழ் வருமாறு:

1) கோக் புத்தகம் - பக்கம் 45 - 1887 க்கு பதில் 1987 என்று பிரிண்ட் ஆகியுள்ளது.
2) கோக் புத்தகம் - பக்கம் 123- பெப்ஸி புத்தகம் - பக்கம் 119 - ஜாக்ஸன் என்பதிற்கு பதில் ஜான்சன் என்று பிரிண்ட் ஆகியுள்ளது.
3) கோக் புத்தகம் - பக்கம் 154 - Available என்பதற்கு Avaliable என்று இருமுறையும் பிரிண்ட் ஆகியுள்ளது. இது ஒரு முக்கியமான விஷயத்தை விளக்குவதால் திருத்தப் பட வேண்டிய ஒன்று.
4) பெப்ஸி புத்தகம் - பக்கம் 152 - மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸும் இந்திரா நூயியும் ஒரே தேதியில் (அக்டோபர் 28). - இந்த வாசகம் நிறைவு பெறவில்லை.

i hav read ur article from linux for u

i am running a redhat Linux  4;
im very  much intrested on ur latest article regarding Dsl;
can i take the steps u referd there with ma os?
is there ny similar custamisations available for Redhat linux??waiting for ur valuable reply
 
 amarnathsankar.blogspot.com/


You can customize in RedHat too

Hi Amar,

Yes you can customize any Linux distribution. You can follow the steps illustrated in my DSL article in a RedHat box too, provided you've installed the required tools.


Reason for change

Any resolution in 2010 to blog frequently ? From the begining of this year, you seem to be active in blogging space. Good :)