tamil
I wrote a book on OpenSource in Tamil and it got published by New Horizon Media (Kizhakku Pathipagam) on last Saturday ie., 07-jan-2012 in Chennai Book Fair 2012. If you get a chance to visit Chennai Book fair drop in at Kizhakku Pathipagam stall and grab a copy of the book.
Following are the link to purchase the book online:
1) https://www.nhm.in/shop/978-81-8493-489-2.html
2) http://www.infibeam.com/Books/open-source-tamil-sa-senthi-kumaran/9788184934892.html
Introduction about this book are available in the following links:
http://www.tamilpaper.net/?p=
http://www.badriseshadri.in/2012/01/blog-post_08.html
Facebook page: http://www.facebook.com/OpenSourceTamil
I ve started writing tamil (my native language) blog posts few months back. Of late the tamil posts I write has increased in stylesen.org, I thought of segregating things and thus came the idea of having a separate tamil blog. My new tamil blog is available in http://www.sasenthilkumaran.com/ You can see a screenshot of my tamil blog in the left, which is exactly similar in design and layout to stylesen.org but the content language is different.
In future you can read all my tamil blogs and articles in www.sasenthilkumaran.com, I ve already moved my tamil poem collection to the new place. There is a link under "what's in this site" section of stylesen.org to reach my tamil blog.
Hope all of you will like my tamil blog :) Updates on new tamil blog posts will still be available via my twitter account "@stylesen".
ரத்தன் டாடா
என்றோ ஒரு நாள் ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணில் இருந்து வெளியேறும் நிலைவரும்போது, அவர்கள் தொடங்கிய தொழில்களுக்கு "டாடா" காட்டி அனுப்ப வேண்டும் என்பதற்காகவே, டாடா குடும்பத்தின் முன்னோர்கள், இப்படி ஒரு பெயரை தங்கள் குடும்பப் பெயராக சேர்த்துக் கொண்டனர் போலும். ஆம், ஆங்கிலேயர்கள் துரத்தி அடிக்கப்பட்ட போது இந்திய தொழில்களின் நிலையை வலுவடைய செய்ததில் பெரும் பங்கு டாடா நிறுவனத்தையே சாரும். இது வெறும் ஒருவரால் தொடங்கி முடிவடைந்த சிறு தொழில் அல்ல. பரம்பரை பரம்பரையாக டாடா குழுமம்இயங்கி வருகின்றது, இதில் தற்போதைய தலைவரான ரத்தன் டாடாவை பற்றி விளக்குகிறது என். சொக்கன் எழுதிய இந்த நூல். ஒரு மனிதரை மட்டும் நமக்கு அறிமுகம் படுத்துவது இந்த புத்தகத்தின் நோக்கம் அல்ல, அது டாடா போன்ற சரித்திரத்தை விளக்குவதற்கு சிறந்த முறையும் அல்ல என்பதை நன்கு உணர்ந்த என். சொக்கன் இந்நிறுவனத்தின் ஒன்றரை நூற்றாண்டு வரலாற்றில் உள்ள சில முக்கியமான நிகழ்வுகளை எளிமையாக விளக்கியுள்ளார்.
கோக-கோலா, பெப்ஸி
சென்னை புத்தக கண்காட்சிக்கு இரண்டாவது முறை சென்ற போது நான் வாங்கிய புத்தகங்களில் ஒன்று என். சொக்கன் அவர்கள் எழுதிய "பெப்ஸி". இதனை வாங்கிய மறுதினமே படித்து முடிக்க நினைத்தேன், அப்போது வானொலி நிகழ்ச்சி ஒன்றில் என். சொக்கன் அவர்கள் பெப்ஸி புத்தகத்தை அறிமுக படுத்தி பேசினார் (நல்ல வசீகரமான குரல் மற்றும் கருத்துக்கள்), இதனை கேட்டு மகிழ்ந்த பின்னர், நான் இப்போது பெப்ஸி புத்தகத்தை படிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். ஆம், பெப்ஸியின் முன்னோடி "கோக் - ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு" என்ற புத்தகத்தையும் என். சொக்கன் எழுதியுள்ளார், இவ்விரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக படித்தால், "கோலா வார்ஸ்" வரலாறு முழுமை அடையும் என்பதால், உடனே சென்று லேண்ட்மார்க்கில் கோக் புத்தகத்தின் ஒரு பிரதியினை வாங்கி வந்தேன் (கிழக்கு பதிப்பக புத்தகங்கள் எங்கும் கிடைக்கும், எனினும் இருவர் டிவிடி வாங்க சென்ற போது, இதனை அள்ளி வந்தேன்).
சைபர் க்ரைம்
யுவகிருஷ்ணா எழுதிய "சைபர் க்ரைம்" புத்தகத்தை படித்தேன். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்த இந்த கட்டுரைகளை ஒரே கோப்பையில் பருகிய திருப்த்தி கிடைத்தது.
"தொழில்நுட்பம் கத்தி மாதிரி, காய்கறி வெட்டவும் பயன்படுத்தலாம், குரல்வளை அறுக்கவும் உபயோகிக்கலாம்."
யுவகிருஷ்ணா குறிப்பிட்டிருக்கும் இந்த வாசகங்கள் முற்றிலும் உண்மை. பரபப்பான இந்த உலக சூழ்நிலையில், வளர்ந்து வரும் சைபர் முன்னேற்றங்களுக்கு மனிதன் அடிமையாகி வருகின்றான். இன்டர்நெட் பயன்படுத்தும் வெகுஜென மக்களில் பலருடைய இரகசியங்கள் குறைந்த பட்சம் அரைநிர்வாணப் படுத்த படுகிறது, இதனை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, எனினும் பிரச்சனை என்று வரும்போது புலம்பி அழுவதில் பலன் ஏதும் இல்லை. இத்தகைய பிரச்சனைகளை ஆராய்ந்து வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த புத்தகம். இன்று கத்திரிக்காய் வாங்குவதில் தொடங்கி, மனிதனின் "காரக்டரை" அறிந்துகொள்வது வரை நாம் அனைவரும் நாடுவது கூகிள் சேவை, இவ்வாறு அனைத்தையும் தேடும் வசதி வந்துவிட்ட சூழ்நிலையில், நாம் நம்மை பற்றி எத்தகைய விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டால், அசிங்கபடுவதையோ அல்லது ஏமாறுவதையோ தவிர்க்கலாம் என்பது இப்புத்தகம் நமக்கு தரும் பாடம்.
பொங்கல் அன்று ஒளிபரப்பான பட்டி மன்றத்தில் "காதலியா, நண்பனா" என்ற தலைப்பில் "நண்பன்" என்ற அணியில் பேசிய திருமதி. பாரதி பாஸ்கரின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக,
"நன்பனின் பெற்றோரையும், தன் பெற்றோராக கருதி, அம்மா, அப்பா என்று அழைக்க செய்வது நட்பு,
ஆனால், காதலியின் தகப்பனை கூட எதிரியாய் பார்க்க செய்வது காதல்"
என்று கூறிய பாரதி பாஸ்கரின் சிந்தனை அருமை! ரசித்து, கைதட்டி மகிழ்ந்தேன்!
பி. குறிப்பு: தமிழில் தலைப்பிட்டாலும் "Drupal"ன் "pathauto" சரியாக லிங்குகளை தமிழில் உருவாக்குகிறது. இனி என் தமிழ் பதிவுகளுக்கு, தமிழ் தலைப்புகள்!
வாத்யார்
கிழக்கு பதிப்பகம் வெளியீடான "வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை" புத்தகத்தை படித்தேன். ஆர். முத்துக்குமார் அவர்கள் எழுதிய, இந்த புத்தகத்தை பற்றிய என் கருத்துக்களை இங்கு பதிகின்றேன்.
"நான் ஆணையிட்டால்,
அது நடந்துவிட்டால்,
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்"
என்ற புகழ்பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் எம். ஜி. ஆர். கிட்டதட்ட அவர் ஆட்சி காலத்தில் இதுதான நடந்தது. அவரது கடும் உழைப்பு, திறமைகளை தாண்டியும், ஏதோ ஒரு வசீகரம் அவரிடம் இருந்துள்ளது, எனவே தான் இன்றும் எம். ஜி. ஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும் ரசிகர்கள் அதிகம்.